Tuesday, June 9, 2020

அரசின்மைவாதி - குறுங்கதை

(பதாகையில் வெளிவந்தது)
தம்பி நீங்க?
நா கல்டர் ஆவணும்
மூணாவது வரிசை டோக்கன் நம்பர் 39
அடுத்தாப்ல நீங்க?
நான் டாக்டர் சார்
ரெண்டாவது வரிசை டோக்கன் நம்பர் 78
நீ சொல்லுப்பா?
நான் நானாகவே இருக்க வேண்டும்
மொத வரிசை 334 ஆவது டோக்கன்
நீ என்னப்பா?
நீங்க யாரு சார் எனக்கு டோக்கன் கொடுக்க?
தம்பி வா உக்காந்து சத்த நேரம் டோக்கன் போடு டீ குடிச்சிட்டு வாரேன்

No comments:

Post a Comment