உலக அரங்கில் இன்று பெருவாரியான மக்கள் பயன்படுத்தும் மாற்று மருத்துவ முறைகளில் சீன மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் முன்னிலையில் இருக்கிறது .உலக மூலிகை சந்தையில் இந்தியாவிற்கு பெரும் பலம் உண்டு .இன்று தழைத்து இருக்கும் பழமையான மருத்துவ முறைகளில் சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் மிகவும் முக்கியமானது .
ஆயுர்வேதம் என்கின்ற இந்த சொல் வட மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது . ஆயுர் + வேதம் , வேதம் என்பது அறிதல் ,அறிவு என்பதை குறிக்கும் .ஆயுர்வேதம் என்பது வாழ்கையை பற்றிய அறிதல் / அறிவு என்று பொருள்ப்படகூடியது.
இது ஒரு மருத்துவ முறை என்பதை காட்டிலும் , ஒரு வாழ்கை முறை என்பதே பொருத்தம் .
ஆயுர்வேதத்தில் மருத்துவம் மட்டும் இன்றி , உணவு பழக்கங்கள் , அன்றாடம் செயல் படுத்த வேண்டிய கடமைகள் , புவியியல் , வேளாண்மை , சமையல் கலை . பௌதிகம் , வேதியல் ,மனோ தத்துவம்,தத்துவம் , ஜோதிடம் ,தாவரவியல் ,விலங்கியல் என பல விஷயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளது .மேலும் எக்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் அதனின் அடிப்படை விரிவாக பேசப்படுகிறது.
ஆயுர்வேதத்தின் வரலாறு
இன்று ஓரளவுக்கு முழுமையாக நமக்கு கிட்டும் ஆயுர்வேத படைப்பு சரக சம்ஹிதையே ஆகும் .இதன் காலம் 1200-1000 BC என்று அனுமானிக்க படுகிறது .சரகர் , அக்னிவேஷ சம்ஹிதை என்னும் மூல புத்தகத்திலிருந்து இயற்றியதாக கூறுகிறார் .இன்று வரை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அதன் அடிப்படை அறிய இதுவே சிறந்த புத்தகமாக கருதப்படுகிறது .
இதன் பின் வந்த முக்கியாமான படைப்பு சுஸ்ருத சம்ஹிதை .இதன் காலம் 200-2 BC என்று கணிக்க பட்டுள்ளது .
சுஸ்ருதரே உலக அளவில் இன்றும் அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக அறிய படுகிறார் .இவரது சிக்கிச்சை முறைகள் கோட்பாடுகள் ஐரோப்பிய கண்டத்திற்கு பரவி தாக்கம் ஏற்படுத்தியது .நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்ற படும் ஹிப்போ கிரேட்ஸ் முன்மொழிந்த 4 humor கோட்பாடு சுஸ்ருதரின் அடிபடையில் வந்தது .
four humor theory என்பது இது தான் , உடலில் நான்கு மூல சக்திகள் உள்ளது அதன் சம நிலை ஆரோகியமாகவும் அதன் ஏற்ற தாழ்வுகள் நோயாகவும் வெளிபடுகின்றன .ஹிப்போ கிரேட்ஸ் சொன்ன நான்கு ஹுமோர் -black bile,yellow bile, phlegm and blood.இன்று வரை நாம் சகஜமாக அறியும் வாதம் ,பித்தம் , கபம் ஆகியவை மூன்று தோஷங்கள் என்று ஆயுர்வேத சித்த மருத்துவ முறைகளில் விளக்கப்பட்டுள்ளது .சரகரும் இதே தான் சொன்னார் , அவருக்கு பின் வந்த சுஸ்ருதரே முதல் முறையாக நான்கு தோஷ கோட்பாடுகளை சொன்னார் .சரகர் சொன்ன மூன்றை விட ரக்தம் எனும் நான்காவது தோஷத்தை சேர்த்தார் .இதுவே தான் ஹிப்போ கிரேட்ஸ் வழங்கிய கோட்பாடுகள் ஆகும் .
மேலும் தெரிந்துகொள்வோம்....