பிரியத்துற்குரிய வானவன் மாதேவியைப்பற்றி சொல்வதற்கும் எழுதுவதற்கும் எனக்கு அனேக விஷயங்கள் உண்டு. எழுதும் மனநிலை எனக்கில்லை. வானதியை எப்போது சந்தித்துவிட்டு வந்தாலும் “சார் எழுதிடிங்களா?” என கேட்பார். கேட்க அவரில்லை என்பதற்காக எழுதாமல் இருக்க முடியாதே.
Tuesday, January 24, 2017
Wednesday, January 4, 2017
தம்பட்டம்
எழுத்தாளன் தனது கதைகளை பற்றி தானே
பேசகூடாது தான். ஆனால் வேறு எவரும் எதையும் பெரிதாக பேசாத போது அவனே பேசும்
துர்பாக்கியமான நிலைக்கு தள்ளபடுகிறான். பெரிய எழுத்தாளனோ தக்குனூன்டு எழுத்தாளனோ
அவனுக்கு வாசிக்கப்படவில்லை அல்லது சரியாக வாசிக்கப்படவில்லை எனும் கவலை இருப்பது
இயல்பே. எனக்கும் அது உண்டு. ஒருவேளை சரியாக வாசித்தால் இன்னும் கூட மதிப்பீடு
கீழிrங்கலாம்: J
சுருக்கமாக எனது
சிறுகதைகளை பற்றி கொஞ்சம் எழுதலாம் என்றிருக்கிறேன். இதுவரையில் தமிழில் பனிரெண்டு
கதைகள் பிரசுரமாகி உள்ளன. ஆங்கிலத்தில் ஒரு அறிவியல் புனைவு எழுதி ஒரு போட்டிக்கு
அனுப்பி இருக்கிறேன். மற்றொரு தமிழ் சிறுகதை பிரசுரத்திற்கு உள்ளது. இரண்டு விதமான
கதைகளை எழுதி இருக்கிறேன் என கூறலாம்.
Tuesday, January 3, 2017
நினைவசை
சற்றே தாமதமாகத்தான் சென்ற ஆண்டின் நினைவுகளை எழுதுகிறேன். புதுவருடம் எனக்கு ரயிலில் பிறந்தது. திருவண்ணாமலைக்கு பயணமாகி கொண்டிருந்தோம். சுதீருக்கு கரும்பு தொட்டில் பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டி இருந்தது. ஆலயத்தினுள் நுழைய முடியாத அளவுக்கு கூட்டம். சுற்று சுவரை கரும்பு தொட்டிலோடு சுற்றி வந்ததோடு சரி. மலையையே ஈசனாக எண்ணி வணங்கி விடைபெற்று, சென்னை பயணம் முடித்து இன்று தான் வீடு திரும்பினேன்.
ஜனவரியில் வளைகாப்பு, அதன் பின்னர் மார்ச் 8 அன்று அதிகாலை பிறந்தான். முந்தைய நாள் காலை ஈற்றரையுள் அனுமதிக்கப்பட்டாள் மானசா, அந்த மகா சிவராத்திரி முழுவதும் விடிய விடிய ஜிப்மர் மரத்தடியில் பதட்டத்துடன் கண்விழித்து கிடந்தேன். குழந்தை பிறப்பதற்கு முன் இரண்டு மூன்று முறையும், சுதீர் பிறந்த பிறகு இரண்டு மூன்று முறையுமாக இந்த ஆண்டு பாண்டிச்சேரிக்கு சென்றபடி இருந்தேன். இரண்டாவது இல்லம் என கூறும் அளவுக்கு அந்நகரை நேசிக்க துவங்கினேன். இரவுகளில் பொன்னொளி உமிழும் சோடியம் விளக்குகளில் கடலை காண்பதும், அங்கு வரும் மனிதர்களை வேடிக்கை பார்ப்பதும் அலாதியான அனுபவம். சில நேரம் பகல்களில் அம்பேத்கர் மண்டபத்தில் அமர்ந்துவிட்டு வருவேன். சிவாத்மா, ரமேஷ் போன்ற நண்பர்களை ஒருவேளையாவது சந்தித்து பேசி விட்டு ஊர் திரும்புவேன்.
Subscribe to:
Posts (Atom)