Monday, November 15, 2010

கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி


நம் கண் முன்னாள் நடக்கும் அத்து மீறல்கள் எத்தனை ?
சுனிதா கிருஷ்ணன் அவர்களை போல் வாழ்க்கை போராளிகளை நாம் இனம் கண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும் .
மனிதர்கள் எத்தனை அசாதாரண கீழ்மைக்கு செல்கின்றனர் என்பதன் சிறந்த எடுத்துகாட்டு .
நாம் என்ன செய்ய போகிறோம் ? மனம் முழுவதும் ஒரு கணக்கிறது. தயவு செய்து இந்த செய்தியை முடிந்த வரை எடுத்து செல்லுங்கள்.இந்த காணொளியை காணுங்கள்.
பாதிக்க பட்டவர்களை நாம் புறக்கணிக்கிறோம் ,பாதிப்பை விட புறக்கணிப்பின் வலி கொடுமையானது .புறக்கணிப்பின் உச்சியில் இவர்கள் உயிர் ஊசல் ஆடுகிறது .அவர்களுடைய ஆன்ம பலம் எத்தனை அபாரமானது !!இத்தனை கொடுமை ,வலி ,வேதனை,புறக்கணிப்புக்கு பின்னும் போராடும் இந்த துணிவு !!
சுனிதா கிருஷ்ணன் ,நாற்பதை தொடும் இந்த பெண் ஒனாய்களால் வேட்டையாடப்பட்ட பொழுது பதினைந்து வயது .அதற்க்கு பின் கிட்ட தட்ட 3200 குழைந்தைகள் ,பெண்களை human sex trafficking இதிலிருந்து மீட்டுள்ளார் ,கிட்ட தட்ட பதினான்கு முறை அவர் தாக்க பட்டுள்ளார் ,அவரது வலது காது செயல் இழந்து போனது ,உதவியாளர் ஒருவரை இழந்துள்ளார் ,ஆனால் அவரது போராட்டம் ஓய வில்லை.hatss off to sunitha krishnan

2 comments:

  1. நன்றி டாக்டர்.சுனிதா கிருஷ்ணனின் இதே செயல்பாட்டை இதே யூடியூப் வழி நான் முன்னொரு பதிவில் சொல்லியிருக்கிறேன்.’பாலியல் தாக்குதல்களும்,பருத்திவீரன்களும்’http://www.masusila.com/2010/01/blog-post_11.htmlஎன்ற அந்தப் பதிவுகள்போன்றவைதான் உடல்மொழி குறித்துச்செய்யப்படும் மிகையான பாவனைகளைச் சாடுமாறு என்னைத் தூண்டியவை

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி அம்மா .அப்பதிவை நான் காணவில்லை ,நிச்சயம் கண்டுவிடுகிறேன்

    ReplyDelete