Saturday, December 4, 2010

ஜோனாதன் லிவிங்ஸ்டோன் எனும் சுதந்திரத்தின் குரல்

எனக்கு பெரிதாக ஆங்கில நாவல்,கதைகளில் அறிமுகம் ,ஆர்வம் இல்லை .இது வரை நான் மொத்தமே ஒரு இருபது ஆங்கில நாவல்கள் படித்து இருந்தால் பெரிய விஷயம் ,அதிலும் ஒரு நாலஞ்சு சிட்னி ஷெல்டன் நாவல்கள் ,பிறகு டேன் பிரவுன் நாவல்கள் ,பிறகு ஹாரி பாட்டர் அனைத்து பாகங்கள் , இதை தவிர இன்னும் நாலஞ்சு தேறலாம் ,பெரிதாக எந்த காரணமும் இல்லை -கதாப்பாத்திரங்களின் சூழலோடு எனக்கு ஓட்டுவது கொஞ்சம் கடினமாக இருந்தது .அதனால் என்னை தகவல் சார்ந்த பொது அறிவு புத்தகங்கள்,சிறு வயதில் சந்தாமமா ,டிங்கில் காமிக்ஸ்,பாட புத்தகங்கள்(குறிப்பாக நான் -டீடைல்) ,பின்னர் கல்லூரியில் ஆன்மீக புத்தகங்கள்,சுய முன்னேற்ற புத்தகங்கள் என்று என்னை சுருக்கி கொண்டேன் .(இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை)
நம் வாழ்வில் வாசிப்பதால் ஏதும் பலன் உண்டா ? சில வாசிப்புகள் நம் வாழ்க்கையே புரட்டி போட்டு விடும் .நேரடியாக நம் இதயத்தில் புகுந்து நம் நம்பிக்கை ,சித்தாந்தங்கள் என்று எல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் .கேள்விகள் ,பயம், உன்னதம் என்று அது பல தளத்தில் நின்று பேசும் ,ஒரு அங்குலமாவது நம்மை முன்னோக்கி நகர்த்தி செல்லும் .ஒரே படைப்பு எல்லாருக்கும் உன்னதத்தை தருவதில்லை ,ஒரு படைப்பு நமக்கு தாக்கத்தை தருகிறது என்றால் அதற்க்கு நாம் தயாராக இருக்கும் நேரத்தில் அதை படித்தால் மட்டுமே அது நம் உள்ளத்தில் மோதி பிரளயமாக வெடிக்கும் .ஒவ்வொரு வாசகனுக்கும் இத்தகைய அந்தரங்கமான அக அனுபவம் ஏதோ ஒரு படைப்பினால் ஏற்படும் .
வாழ்க்கையில் எத்தனையோ படைப்புகள் வரும்நாட்களில் தாக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கலாம் ஆனால் எதுவும் அந்த முதல் அனுபவத்திற்கு ஈடாகாது ,முதல் காதலை போல்.
கல்லூரி நான்காம் ஆண்டு படித்து கொண்டிருந்த சமயத்தில் ,மே மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன் .அப்பொழுது எனக்கு மனதில் சில விஷயங்கள் என்னை போட்டு அழுத்தி கொண்டிருந்த காலம் .அப்பொழுது ஊரில் எனது நீண்ட நாள் பள்ளி தோழியை சந்தித்தேன் ,அவளுக்கு தேர்ந்த ரசனை உண்டு ,ஆங்கிலத்தில் நெறைய நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசிப்பாள் ,பின்னர் படித்த புத்தகத்தை பற்றி நெறைய பேசுவாள் ,அப்படி அவள் எனக்கு பரிந்துரைத்த புத்தகம் ஏராளம் ,புத்தகத்தின் தடிமனை பார்த்து ஒதுங்கி விடுவேன் ,அவள் எனக்கு அந்த நேரத்தில் இரண்டு புத்தகங்களை அறிமுகம் செய்தால் ஒன்று the alchemist-by paulo coelho (அல் கெமிஸ்ட் ) இன்னொன்று ஜோனாதன் லிவிங்க்ஸ்டன் தி சீ கல் (jonathan livingston the seagull). அல் கெமிஸ்ட் நான் அப்போது படிக்கவில்லை ,அவள் வீட்டில் இருந்த அந்த சிறிய புத்தகத்தை எனக்கு படிக்க கொடுத்தால் ,இதையாவது படி என்றாள்
.அந்த புத்தகம் ஐம்பது அல்லது அறுபது பக்கங்கள் தான் இருக்கும்,அதிலும் நெறைய படங்கள் வேறு இருக்கும் ,சரி சின்ன புக் தான படிக்கலாம் என்று நானும் படித்தேன் , அது தான் ஜோனாதன் லிவிங்க்ஸ்டன் தி சீ கல் .
ரிச்சர்ட் பாச் எனும் முன்னாள் அமெரிக்க விமான படை விமானி எழுதிய புத்தகம் இது .சீ கல் எனும் கடலை நம்பி வாழும் ஒரு பறவை இனம் உண்டு .அந்த பறவை கூட்டத்தில் ஒரு பறவை தான் ஜோனாதன்.அந்த பறவை கூட்டதிலிருந்து தன்னை வேறுபடுத்தி கொண்டவன் ,அவனுக்கு பல லச்சியங்கள் உண்டு ,வெறும் உணவுக்காக பறப்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை ,பறப்பது சுகம்,உயரே உயரே ,மேலும் உயரே,வின் மீன்களை எட்டி பிடிக்க அவனுக்கு அடக்க முடியாத அவா ,அவன் அவனது சமூகத்தில் வேறுபட்டு சிந்திக்க தொடங்கியதால் அவனை அவனது சமூக பெரியவர்கள் அவனது பெற்றோர்கள் ,குடும்பம் என அனைவருமே அவனை அடக்க முயன்றனர் ,பொது புத்தி விளையாடியது ,அவனது தாய் தந்தை அவனை கண்டிக்கின்றனர் ,உணவுக்காக நாம் பறக்கிறோம் ,அதனால் நீ அந்த அளவுக்கு பறக்க நேர்ந்தால் போதும்,இதர பறவைகள் போல்,சீ கல் போல் உன்னால் ஏன் இருக்க முடியவில்லை ? நமக்கு எது வருமோ அதை மட்டும் செய்து சமூகத்தோடு ஒத்து வாழு என்று அறிவுரைகள் .ஜோ அவ்வாறு அமைதியாக் இருக்க முயல்கிறான் ,ஆனால் முடியவில்லை .பெற்றோர்களுக்கு தெரியாமல் தொடர்ந்து பறக்கும் நுணுக்கங்களை அறிகிறான் ,அவனுக்கு தன்னால் எது முடியும்,எது முடியாது ,அது ஏன் முடியாது இதை தெரிந்து கொள்ள வேண்டும் ,ஆயிரம் அடிகளிலிருந்து வேகம் எடுக்கிறான் ,கடலை ஒட்டி பறக்கிறான், இன்று அவனுடைய சமூகத்தில் உயிர் வாழும் எந்த சீ கல் விடவும் அவன் பறக்கும் நுணுக்கங்களை கற்று தேருகிறான்.


ஒரு கட்டத்தில் தன்னால் கழுகை போல் பறக்க முடியாது ,என்று தனது எல்லையை உணர்கிறான் ,நாம் கூட்டத்தினரோடு இனைந்து வாழ வேண்டும் என்று தன்னை தானே சமாதானப்படுத்துகிறான் .
ஆனால் மறு நொடி அவனது கனவு ,ஆசை அவனது தீர்மானத்தை நொறுக்குகிறது.எந்த ஒரு சீ கல் அடையாத ஒரு உயரத்தை அவன் அடைகிறான் ,பெருமையோடு கூட்டம் இருக்கும் கரைக்கு திரும்பினால் ,அங்கே ஒரு பெரும் கூட்டம் இவனுக்காக காத்து கொண்டிருக்கிறது , ஜோ ஒரு கிளர்ச்சிகாரனாக சித்தரிக்க படுகிறான் அவனது சாதனை அங்கு அங்கீகரிக்க பட வில்லை ,ஆனால் அது ஒரு விதி மீறலாகவும், அந்த இனத்திற்கு வந்த அவமானமாகவும் சித்தரிக்க படுகிறது ,ஜோ சமூகத்திலிருந்து தள்ளி வைக்க படுகிறான் .,ஜோ தனது கருத்தை சொல்கிறான் ,வாழ்க்கைக்கு மேலான அர்த்தம் இருக்கிறது,நாம் இப்பொழுது வாழும் வாழ்க்கையை விட மேலாக வாழலாம் ,ஆனால் செவி மடுக்கவில்லை .


அவனது தனிமையை விட சமூகத்தின் மூடதனம் அவனை அதிகமாக வாட்டியது .அவன் வேறு ஒரு சீ கல் உலகத்திற்கு அழைத்து செல்ல படுகிறான் .,அது சொர்க்கம், இவனை போலவே வெவ்வேறு கட்டத்தில் முயன்று வெகு சில சீ கல் அங்கு வந்து உள்ளன , கற்க இன்னும் நெறையா இருக்கிறது என்று உணர்கிறான் ,பழைய உலகை மறந்துவிட்டான் ,புதிய கேள்விகள் -விவாதங்கள் புரிதல்கள் ,தனது பறக்கும் திறமை உச்ச கட்ட நேர்த்தியை நோக்கி ஜோ வந்து கொண்டிருந்தான் , அவன் இந்த உலகத்திலிருந்து இதை விட மேலான உலகத்திற்கு செல்ல அவனுக்கு வாய்ப்பு வரும் காலம் நெருங்கியது ,ஆனால் ஜோ மீண்டும் அவனது கூட்டத்திற்கு திரும்ப விரும்பினான், தன்னை போல் உயரே பறக்க துடிக்கும் இளம் சீ கல்களை பயிற்றுவிக்க எண்ணினான் ,
ப்லேட்சேர் -தன்னை போல் உயரே பறக்க துடிக்கும் ஒரு இளம் கல் ,ஜோ தன்னையே காண்கிறான் ,அவனும் தனது கூட்டத்தால் வெறுக்க பட்டவன் ,அவனை பயிற்றுவிக்கிறான் .மேலும் பலர் இணைகிறார்கள்,ஜோ வின் சீடர்கள் அதிகமாகிறார்கள் ,சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் மீண்டும் சமூகத்திற்கு திரும்ப கூடாது ,ஆனால் ஜோ மற்றும் சீடர்கள் சமூகத்திற்கு திரும்புகிறார்கள் ,இவர்களின் செயலை கண்டு ,சமூக பெரியவர்கள் கொதிப்படைகிறார்கள் ,ஆனால் இவர்களின் திறமை கண்டு ஒரு கூட்டம் வாயை பிளக்கிறது ,இரவில் இவர்களை சுற்றி வட்டம் கூடுகிறது .ஜோ இறுதியில் இறை தூதுவனாக சித்தரிக்க படுகிறான்.சமூகம் ப்லேட்சரை சாத்தான் என்று சாடுகிறது ,வெறுப்பை உமிழ்கிறது .தங்களை வெறுத்து ஒதுக்கிய சமூகத்தை ப்லேட்சேர் வெறுக்கிறான், ஆனால் அவன் பார்வை மாறுகிறது,எல்லா சீ கல் இடமும் உள்ள மேன்மையை காண்கிறான்,நேசிக்கிறான் ,புதிய உச்சத்தை அடைகிறான் .

அதி அற்புதமான இந்த சிறிய நாவல் எனக்கு கொடுத்த உணர்வுகள் அபாரமானது ,எனக்கே இறக்கை முளைத்தது போல் இருந்தது ,எளிமையான நடை, அருமையான குறியீடுகள் மூலம் வாழ்க்கை பார்வையை உன்னதமாக சொல்லும் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது ,மற்றும் என்னை அதிகம் பாதித்தது என்றும் சொல்லலாம் .இதனுள் ப்லேட்சேர் - ஜோ நடத்தும் விவாதங்கள் ,ஜோ தன்னை விட மூத்த சியாங் கல் இடம் நடத்தும் விவாதம் ,சுலைவான் மற்றும் ஜோ விவாதம் என்று பல அற்புதமான,எளிமையான விவாதங்கள் கதை முழுவதிலும் உள்ளது .இந்த கதையை நாம் பல தளங்களில்,பல பொருள்கள் கொண்டு விவாதிக்க முடியும் அதுவே இதன் வெற்றி .இதை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன் .நிச்சயம் முயல்வேன் .நம் அகத்தை விரிக்கும் அனுபவம் இதில் கிடைக்கிறது .நெகிழ்ச்சியான இந்த கதையை அனைவரும் வாசிக்க வேண்டும் ..

எனக்கு இந்த கதையில் மிகவும் பிடித்த வரி.“The only true law is that which leads to freedom,” Jonathan said.“There is no other.”
குறிப்பு:மக்கள் பயன்பெறும் வண்ணம் இதை இலவச கணினி புத்தகமாக வெளியிட்டுள்ளனர் அதன் சுட்டி
http://img1.liveinternet.ru/images/attach/b/2/3599/3599086_richard_bach__jonathan_livingston_seagull.pdf
அத்துடன் இது திரைப்படமாகவும் வெளி வந்துள்ளது (நானும் கண்டததில்லை!!)
இந்த அற்புதமான இசையை தொடுத்து எடுக்க பட்ட இந்த காணொளியை காணுங்கள்

10 comments:

  1. மாறுப்பட்ட வகையில் ஒரு புத்தக பகிர்வு. நன்றாக எழுதியுள்ளீர்கள். வாசித்தமை மகிழ்க்கியாக உள்ளது.

    ReplyDelete
  2. happy feet எனப்படும் ஒரு படமும் இதைத் தழுவியே எடுக்கப்பட்டது. பாருங்கள், நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. ஒரு கட்டத்தில் தன்னால் கழுகை போல் பறக்க முடியாது ,என்று தனது எல்லையை உணர்கிறான் ,நாம் கூட்டத்தினரோடு இனைந்து வாழ வேண்டும் என்று தன்னை தானே சமாதானப்படுத்துகிறான் .

    ..... Interesting thought! அருமையான கருத்துக்களை கொண்ட புத்தக பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி உதயம் -ரமேஷ்

    ReplyDelete
  5. வருகைக்கும் பரிந்துரைக்கும் நன்றி ராமலிங்கம் :)
    happy feet- பெண்குயீன் படம் ,நிச்சயம் பார்க்கிறேன் :)

    ReplyDelete
  6. வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சித்ரா மேடம் :)

    ReplyDelete
  7. ஆங்கில நாவல்களின் அட்டை படத்தை கூட பார்த்திராத எனக்கு இந்த பதிவு புது அனுபவம். ரசித்து படித்தேன். நன்றி

    ReplyDelete
  8. இந்த புத்தகம் வெளி வந்து ஆண்டுகள் பலவாயினும், அதன் செய்தி சிர்ந்ஜீவித்துவம் பெற்றது.Happy feetம் பாருங்கள்.

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டி வீ ஆர் சார் :)
    திருமதி .கிருஷ்ணன் ,அட பரவா இல்லைங்க,அதனால ஒன்னும் மோசமில்ல :)
    மோகன்ஜி- அந்த படத்த நிச்சயமா பாக்கணும் ,பாத்துடறேன்:)

    ReplyDelete