Wednesday, October 20, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் - 6 -நோய்

ஒவ்வொரு மருத்துவ முறையும் உலகில் தோன்ற நோய் , நோய் பற்றிய பார்வை தான் முக்கியம் .
ஆங்கிலத்தில் dis ease -என்று நோயை குறிப்பிடுகிறோம் . நோய் என்பதை புரிந்து கொள்ள ஆரோக்யம் என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும் .ஆரோக்கியம் என்பது வட மொழியிலிருந்து வந்த ஒரு சொல்.ரோகம் இல்லாத சூழல் என்பதே ஆரோகியத்தின் பொருள்.
ஆயுர்வேதத்தை பொறுத்த மட்டில் காரான காரிய கொட்பாடில் நம்புகிறது .நமது உடலில் உள்ள பல்வேறு அம்சங்கள் ஒத்திசைவோடு செயல் படுகின்றது .ஒட்டுமொத்தமாக ஒரு சம நிலை தன்மை இதில் அடங்கி இருக்கிறது .இந்த சமநிலைத்தன்மை நீடித்து இருக்கும் வரை எந்த கோளாறும் இல்லை .இது குலையும் போது வரும் சூழலே நோய் .ஆங்கில - நவீன மருத்துவத்திற்கும் பண்டைய இந்திய மருத்துவத்திற்கும் நோயின் பார்வையில் உள்ள வேறுப்பாட்டை இப்படி புரிந்து கொள்ளலாம் , நம் உடல் என்பதை ஒரு தேசத்தோடு ஒப்பிட்டால் , கிருமி அல்லது நோய் எனும் விதேச சக்தி நம் தேசத்தை தாக்குகிறது . நாம் உலகில் வசித்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பல்வேறு நோய்களினோடு , கிருமிகளினோடு நாம் அறியாமலே நமது நோய் எதிர்ப்பு சக்தி எனும் ராணுவம் போரிட்டு கொண்டுள்ளது .நம் ஒவ்வொரு செயலும் , ஒவ்வொரு எண்ணமும் , நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நாம் சமநிலைதன்மையை குலைக்கிறோம், உடல் அதன் சக்திகளை கொண்டு இதை நிரப்பி சரி செய்ய முயல்கிறது .ஒவ்வொரு நிமிடமும் இது நடக்கிறது , பொதுவாக நம் உடலின் ராணுவம் வேகமாக செயல்பட்டு எதிரிகளை அழிக்கிறது.ஒரு கட்டத்தில் நமது உடலின் ராணுவம் சோர்ந்து விடுகிறது அல்லது எதிரிகளின் பலம் அதிகமாகி பின்வாங்கும் சூழல் ஏற்படுகிறது .இந்த கட்டம் வந்த உடன் தான் உடல் சில குறியீடுகளை நமக்கு அளிக்கிறது , எங்களால் சமாளிக்க முடியவில்லை ,எங்களுக்கு உதவி தேவை எனும் குறியீடு .இந்த குறியீடுகளே நோயின் அறிகுறிகளாக தென்படுகிறது , சுருக்கமாக சொன்னால் வலி , ஜுரம் போன்ற அறிகுறிகள் நமது கவனத்தை உடலின் மீது திருப்ப ஒரு உத்தி என எண்ணலாம்.
இந்த கட்டத்தில் நாம் உடலின் ராணுவத்திற்கு உதவுவது தான் மருத்துவம் .இதை இரண்டு மாதிரியில் செய்யலாம் , ஒன்று ராணுவத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கலாம் , தமது படையை , புதிய ஆயுதங்களை வழங்கலாம் அல்லது இருக்கும் ராணுவத்தை சீர்ப்படுத்தி எதிரிகளை திருப்பி தாக்கும் திறனையும் உற்சாகத்தையும் அளிக்கலாம் .
முதலாவது நவீன மருத்துவத்தின் வழி இரண்டவாது பண்டைய மருத்துவத்தின் வழி .ஆண்டி பயோடிக் போன்ற மருந்துகள் வெளியிலிருந்து வந்து சேர்ந்த கூடுதல் படைபலம் , அவர்களுக்கு என்று ஒரு ஆயுள் உண்டு அது வரை போராடி விட்டு உடலிலிருந்து கரைந்துவிடுவர் .பண்டைய மருத்துவ முறைகள் நமது பாதுகாப்பை பல படுத்தி தாக்குதலை தாங்கும் வல்லமையை அளிக்கின்றது.
இது ஒரு பொதுவான புரிதல் என்றாலும் இதற்க்கு இரண்டு மருத்துவ முறைகளிலுமே விதி விலக்குகள் உண்டு.
இது வெளியிலிருந்து வரும் கிருமிகளுக்கு பொருந்தும் சித்தாந்தம் .இப்பொழுது அதிகமாக மக்களை பாதிப்பது தவறான வாழ்க்கை முறை பின்பற்றுவதால் வரும் நோய்களே பிரதானம் , மெடபோலிக்(metabolic ) நோய்கள் ,auto immune diseases ஆகியவைகள் எனலாம் .
இதில் குறிப்பாக auto immune diseases - நமது சர்க்கரை நோய் , முடக்கு வாதம் (rhematid arthritis) இவை எல்லாம் இதில் அடங்கும் .இந்த வகை நோய் சற்று வித்யாசமானது ,நமது உடல் ராணுவத்தில் பல்வேறு அணுக்கள் பல்வேறு வேலையை பிரித்து செய்கின்றன ,முக்கியமாக மூன்று பிரிவுகள் என்று சொல்லலாம் முதலில் எதிரிகளை கண்டு பிடிக்கும் பகுதி (identification) ,பின்பு எதிரிகளை அழிக்கும் பகுதி(eradication) பின்பு எதிரிகளின் தகவலை சேமிக்கும் பகுதி(database) .இந்த மூன்று அம்சங்களும் மிக முக்கியமானது , ஒரு கிருமி நமது உடலில் நுழைந்தால் முதலில் அதை கிருமி , எதிரி என்று நமது உடலின் ராணுவம் கண்டு கொள்ள வேணும் , பின்பு அது இதற்க்கு முன் உடலில் நுழைந்து அழிக்க பட்ட எதிரிகளின் தகவல்களோடு இந்த எதிரியை ஒப்பிட்டு பார்க்கும் , அதில் தகவல்களுடன் ஒத்துமை இருந்தால் , அந்த கிருமியை எளிதில் வீழ்த்தலாம் , ஏனெனில் முன்பே இந்த கிருமியை அழிக்க நமது உடல் ராணுவம் ஒரு முறையை கையாண்டு வெற்றிகொண்டுள்ளது .இந்த முறையை தான் நாம் தடுப்பூசி முறையில் பயன் படுத்துகிறோம் .பலவீனப்படுத்த பட்ட நோய் கிருமிகளை உடலில் செலுத்தி அதற்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி அந்த நோய் கிருமியின் தகவல்களை நமது உடல் சேமித்து வைத்து விடுகின்றன .மீண்டும் தாக்குதல் தொடங்கும் போது எளிதில் வீழ்த்த முடிகின்றது .இந்த auto immune diseases இல் என்ன நடக்கிறதென்றால் வெளியிலிருந்து வரும் ஒரு சக்தியை கிருமி என்று என்னுவதக்ற்கு பதிலாக நமது உடலிலே உள்ள நமக்கு அன்றாடம் உழைத்து பயன் தரக்கூடிய நம் உடலின் மற்ற அவசியமான திசுக்களை எதிரியாக எண்ணினால் என்ன நடக்கும் ? அது தான் இது . ஒரு உள் நாட்டு போர்.நமது உடலின் ராணுவம் நமது உடலின் திசுக்களையே அழிப்பது.(நமது தமிழ் சமூகத்திற்கும் கூட இந்த நோய் தான் உள்ளது போலும், சொந்த தமிழ் சகோதர்களை அழித்தொழிக்க உதவி கொண்டு இருக்கிறோம் ).இவ்வாறு இன்சுலின் சுரக்கும் திசுக்கள் அழிந்தால் சர்க்கரை நோய் வருகிறது , மூட்டுகளில் உள்ள திசுக்கள் அழிந்தால் முடக்கு வாதம் வருகிறது , தோல் திசுக்கள் அழிந்தால் சொரியாசிஸ் (படல நோய்) வருகிறது .
இவ்வகை நோய்களுக்கு எந்த முறையிலுமே நிரந்தர நூறு சத விகித தீர்வு என்பது கிடையாது , காரணம் நாம் என்ன தான் முயன்றாலும் நமது உடல் ராணுவத்தின் மெமரியில் இந்த திசுக்கள் நமது எதிரி என்று படிந்து விட்டது .இதை நாம் என்ன மருந்து கொடுத்தாலும் மாற்ற முடியாது என்பதே நிதர்சனம் ,

ஒரு வரியில் சொல்வதென்றால் நம் எல்லோர் உள்ளும் ஒரு மருத்துவர் இருக்கிறார் நாம் செய்ய வேண்டியது அவருக்கு துணை நிற்பது மட்டுமே

இன்னும் தெரிந்து கொள்வோம்...

3 comments:

 1. ஒரு வரியில் சொல்வதென்றால் நம் எல்லோர் உள்ளும் ஒரு மருத்துவர் இருக்கிறார் நாம் செய்ய வேண்டியது அவருக்கு துணை நிற்பது மட்டுமே


  ..... நிறைய தகவல்களுடன், நல்ல பதிவு. நன்றி.

  ReplyDelete
 2. வாங்க சித்ரா மேடம் :)
  உங்கள் தொடர் ஊக்கத்திற்கு நன்றி !

  ReplyDelete
 3. தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அறிவு. நல்ல பதிவு. தொடரட்டும் விரிந்த ஆழ்ந்த பார்வை....

  ReplyDelete