எழுத்தாளன் தனது கதைகளை பற்றி தானே
பேசகூடாது தான். ஆனால் வேறு எவரும் எதையும் பெரிதாக பேசாத போது அவனே பேசும்
துர்பாக்கியமான நிலைக்கு தள்ளபடுகிறான். பெரிய எழுத்தாளனோ தக்குனூன்டு எழுத்தாளனோ
அவனுக்கு வாசிக்கப்படவில்லை அல்லது சரியாக வாசிக்கப்படவில்லை எனும் கவலை இருப்பது
இயல்பே. எனக்கும் அது உண்டு. ஒருவேளை சரியாக வாசித்தால் இன்னும் கூட மதிப்பீடு
கீழிrங்கலாம்: J
சுருக்கமாக எனது
சிறுகதைகளை பற்றி கொஞ்சம் எழுதலாம் என்றிருக்கிறேன். இதுவரையில் தமிழில் பனிரெண்டு
கதைகள் பிரசுரமாகி உள்ளன. ஆங்கிலத்தில் ஒரு அறிவியல் புனைவு எழுதி ஒரு போட்டிக்கு
அனுப்பி இருக்கிறேன். மற்றொரு தமிழ் சிறுகதை பிரசுரத்திற்கு உள்ளது. இரண்டு விதமான
கதைகளை எழுதி இருக்கிறேன் என கூறலாம்.