(சொல்வனத்தில் வெளியான கட்டுரை)
'இரும்புக் கரம் கொண்டு மனித இனத்தை மகிழ்ச்சியை நோக்கி விரட்டுவோம்’ – பிரபலமான கம்யுனிச கோஷம்
1937 ல் இரண்டு முதிய போல்ஷெவிக்குகள் ஒரு சிறைக்குள் அமர்ந்தபடி பேசிக் கொள்கிறார்கள். ஒருவர் மற்றொருவரிடம் “கம்யுனிசத்தை காண்பதற்கு நாம் உயிர் வாழ்ந்திருக்க மாட்டோம் என எண்ணுகிறேன், ஆனால் நிச்சயம் நம் பிள்ளைகள் காண்பார்கள்”. மற்றொருவர், “ஆம்… நம் பாவப்பட்ட பிள்ளைகள்” – ஒரு சோவியத் துணுக்கு
நிகழ்வு – 1 :
இடம் – சோவியத் ரஷ்யாவின் இடுங்கிய கம்யூன்களில் ஒன்று. ஐந்து குடும்பங்களின் 27 நபர்கள் வாழும் நெரிசலான கட்டிடம்.