Wednesday, December 15, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம்-10 -மருத்துவ தகவல்கள் (tips)


சில எளிய மருத்துவ தகவல்களை இப்பகுதியில் பகிர்கிறேன்
1.சைனஸ் தலைவலி பாதிப்பு உள்ளவர்கள் தலை குளிக்கும் நாட்களில் தலை பாரம்,தலை வலி வரும் ,இத்தகைய சமயங்களில் தலைக்கு இளம் சூடான ஒரே வெந்நீர் (அதவாது வெந்நீருடன்,குழாய் தண்ணி கலக்காமல் ) தலைக்கு ஊற்றிவிட்டு ,அரை டம்பளர் சுடு தண்ணீரில் ஒரு அரை டீ ஸ்பூன் மிளகு பொடி கலக்கி ஒரே மடக்கில் குடித்தால் அன்று தலை பாரம்,வலி வராது.
2.நாம் சமைக்கும் பொழுது மிளகாய்க்கு பதில் மிளகு ,கரும்பு வெள்ளத்திற்கு பதில் பனை வெள்ளம் (கருப்பட்டி),சீனிக்கு பதிலாக கற்கண்டு உபயோகித்தல் நலம் பயக்கும் .குறிப்பாக உருளை கிழங்கு 'ரோஸ்ட் ' செய்யும் பொழுது மிளகு போடி சேர்த்து வதக்கினால் ருசியும் நன்றாக இருக்கும்,உருளை சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் கால் வலி ,கை வலி வராது

3.ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு அதிகம் சேர்க்க கூடாது என்று ஒரு நம்பிக்கை உண்டு,இது ஆராய்ச்சிக்குட்பட்டது ,எனினும் எதுக்கு 'ரிஸ்க்' என்று எண்ணினால் நாம் உபயோகிக்கும் உப்பிற்கு பதிலாக இந்து உப்பு (pottasium salt)சிறிதளவில் உபயோகிக்கலாம் .

4.தூக்கமின்மை இருந்தால் உறங்குவதற்கு முன் உள்ளங்கால்களில் நன்றாக சூடான நல்லெண்ணெய் தேய்த்து ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் உறக்கம் வரலாம்.

5.திடிரென்று மூச்சு திணறல் ஏற்ப்பட்டால் ,(குறிப்பாக குழந்தைகள்,முதியவர்களுக்கு) கொஞ்சம் தேங்காய் எண்ணெய் எடுத்து சூடாக்கி அதில் சிறிது பச்சை கர்ப்பூரத்தை (இல்லாத பட்சத்தில் சூடம் உபயோகிக்கலாம் ) போட்டு அது கரைந்த பின் அந்த எண்ணெய் நெஞ்சு ,விளா,முதுகு பகுதிகளில் தடவினால் ஓரளவுக்கு மூச்சு திணறல் குறையும் .

6.மூட்டுகளில் வலி வீக்கம் இருந்தால் ,கொஞ்சம் ஆத்து மணலை எடுத்து இரும்பு வானெலியில் வறுத்து அதை துணியில் பொட்டலமாக கட்டி ஒத்தடம் கொடுத்தால் வலி நன்றாக குறையும் ,குறிப்பாக மூட்டுகளில் பிடிப்பு உள்ளவர்கள் இதை செய்வதன் மூலம் நல்ல பலன் அடையலாம் .
7.கொத்தவரங்காய் -(cluster beans) அடிக்கடி சேர்ப்பது மூலம் சர்க்கரை நோய் ஓரளவுக்கு கட்டுபடும்,அதுவும் இன்சுலின் எடுத்து கொண்டிருந்தால் அதன் தேவையை குறைக்கும் .

8.வேர்கடலை உள்ள ஊட்ட சத்துகள் பாதாம் பிஸ்தா ஆகியவையில் உள்ள புரதத்திற்கு இணை ஆனது .வேர்க்கடலை சாப்பிடும் பொழுது அதன் வெளி தோலை சேர்த்து சாப்பிட வேண்டும் , அதில் நம் உடலுக்கு தேவையான 'ஜின்க் ' மற்றும் ஆண்ட்டி - ஆக்சிடென்ட்ஸ் (anti-oxidants) அதிக அளவில் இருக்கிறது .
9.எலும்பு முறிவு, எலும்பு உருக்கி நோய்களால் பாதிக்க பட்டவர்கள் முளை கட்டிய பயறை சிறிது சர்க்கரை அல்லது உப்புடன் சேர்த்து தினமும் உண்டால் போதிய அளவு சுண்ணாம்பு சத்து உடலுக்கு கிட்டும் .பிரண்டை மோரில் ஊறவைத்து பின்பு துவையல் அரைத்து சாப்பிடுவது நன்மை பயக்கும் .

10.உடல்பயிற்ச்சி செய்யும் பொழுது நமது உடலுக்கு தகுந்த மாறி செய்ய வேண்டும் .அதிக எடை ,பளு தூக்குவது ஆபத்தானது .நமது வயிற்று பகுதிகளில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் குடலிறக்கம்(hernia) ஏற்பட வாய்ப்பு உண்டு .

6 comments:

 1. அடிக்கடி இடுப்பு வலி வருவதற்கு ஏதாவது மருந்து உண்டா சார்? நல்ல பகிர்வு, நன்றி

  ReplyDelete
 2. அன்புள்ள இரவு வானம்
  இடுப்பு வலிக்கு காரணம் அறிய வேண்டும், எளிய தசை தளர்ச்சி, முதுகெலும்பு தேய்மானம் என்று பல காரணம் .
  மல கட்டு ஏற்பாடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.சில யோகா ஆசனங்கள் மூலம் வழியை கட்டுபடுத்திடலாம்.விரிவா எழுதுறேன் .

  ReplyDelete
 3. மிகவும் பயனுள்ள எளிய குறிப்புகள். பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 4. கண்டிப்பா எழுதுங்க சார், ஆவலாக உள்ளேன்

  ReplyDelete
 5. வணக்கம்
  இன்று வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம்மாகியுள்ளது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_3.html?showComment=1378165049455#c4515847910923155297வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. பயனுள்ள மருத்துவ குறிப்பு.வலைச்சரத்தில் இந்த பதிவை குமார் குறிப்பிட்டு இருந்தார் .
  நன்றி.

  ReplyDelete