Wednesday, November 17, 2010

ஆட்டிசம் ,கற்றல் குறைப்பாடுகள் ஓர் அலசல்

ஆட்டிசம் -இன்று உலகையே ஆட்டி படைக்கும் ஒரு நோய் .குறிப்பாக இந்த கணினி யுகத்தில் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது .அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் குழந்தைகளின் எடை பருமனையும் ,ஆடிசத்தயும் கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் தவிக்கிறது .அமெரிக்காவில் 166 குழந்தைகளுக்கு ஒருவர் என்ற ரீதியில் ஆட்டிசம் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது .நமது இந்தியாவில் 250 குழந்தைகளில் ஒன்று எனும் வீதத்தில் சுமார் நாற்பது லட்சம் பேர் பாதித்து இருக்கலாம் என்று ஆட்டிஸ்டிக் சொசைட்டி இந்தியா கூறுகிறது .
குழந்தைகள் பற்றிய அறிவு முக்கியம் ,அவர்களது நடவடிக்கைகளை கூர்ந்து அவதானித்தல் மூலமே இந்த நோயை நாம் கண்டறிய முடியும் .திட்டவட்டமாக இந்த நோய்க்கு காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை , மரபணுக்கள் மற்றும் புற சூழல் ஆகியவை இரு பெரும் காரணிகளாக நம்பப்படுகின்றன . ஆட்டிசம் எனும் நோய் ஒரு கூறுக்குள் அடக்க முடியாது ,இது பேச்சு ,செயல் ,அசைவு ,புரிதல் ,மொழி கற்று கொள்ளுதல் ,ஞாபகம் ,மனம் என்று பல்வேறு தளத்தில் பாதிப்பினை ஏற்படுத்த வல்லது .இதை மொத்தமாக ஆட்டிசம் சார்ந்த நோய்கள்(autistic spectral disorders) என்று வரை அறுக்கலாம் .
சுமார் மூன்று வயதிலேயே இந்நோயை நாம் இனம் காணலாம் .நெரம்பு மண்டலம் மற்றும் மரபணு கூறுகளின் பாதிப்பால் வளர்ச்சி தடை ஏற்படுகிறது .குழந்தைகள் அந்தந்த வயதில் கற்று கொள்ளவேண்டிய திறன்களை பயில்வதில்லை ,வார்த்தைகள் ,சப்தங்கள், மொழி ஆகியவை சரியாக உள்வாங்க படுவதில்லை .அவர்களுக்கென்று ஒரு தனி உலகம் அதில் தான் சஞ்சாரம் .
ஆட்டிசம் மூளைக்கும் நுண்ணறிவுக்கும் ஏதோ ஒரு தொடர்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது .ஏதோ ஒரு துறையில் அவர்கள் அசாதாரணமாக திகழ முடியும் ,ஆகினும் கூட அது உயர் நுண்ணறிவு ஆட்டிசம் எனும் ஒரு பிரிவில் மட்டுமே சாத்தியம் .இந்த காணொளியை காணுங்கள் .

ஸ்டீபன் ,இங்கிலாந்தை சேர்ந்தவர் ,தனது முதல் ஐந்து வருடங்களில் முற்றிலும் வாய் பேச இயலாதவர் .இவருக்கு ஓவிய திறமை இருந்ததை கண்டு கொண்டு அதில் அபார திறமையாக செயல் படுகிறார் ,இவருக்கு பட்டை பெயரே ஹுமன் காமெரா ,எந்த ஒன்றையும் சில வினாடிகள் பார்த்தாலே அதை முழுவதுமாக தீட்டிவிடுவார்.மேலே நீங்கள் காணும் கானொளியில் இத்தாலி தேசத்தின் தலை நகரமான ரோம் நகரை ஒரு முறை ஹெலிகாப்டேரில் சுற்றி வந்து விட்டு மூன்று நாட்களில் அதை அப்படியே தீட்டுகிறார் .எந்த ஒரு தகவல் பிழையும் இல்லாமல் .
தாரே ஜமீன் பர் படத்தில் வரும் குழந்தை இவ்வகையே , ஐன்ஸ்டீன் ,எடிசன் போன்றவர்கள் கூட தங்களது இளம் வயதில் கற்றல் குறைப்பாடுகள் உள்ளவர்களாகவே திகழ்ந்து உள்ளனர் .
இவ்வகை குழந்தைகள் தங்கள் வாய்க்குள்ளே முனுமுனுக்கும் ,நாம் சொல்வதை காது கொடுத்து கேட்க்காது .ஆட்டிசம் சார்ந்த நோய்கள் பல கூறுகள் .கற்றல் குறைப்பாடு (learning disabilities)ஆட்டிசத்தோடு இனைந்து இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் இவ்வகையில் ஒன்று தான் டிஸ்லெக்ஸ்யா -எழுத்துக்கள் சரியாக புரியாததால் வரும் கற்றல் குறைப்பாடு .


இந்த படத்தை காணுங்கள் ,எழுத்துக்கள் mirror image போல் திருப்பி எழுத பட்டிருக்கும் . e, s,c d,p,m இந்த எழுத்துக்கள் அனைத்துமே தவறாக இருக்கும்

இதை தவிர டிஸ்கால்குலியா-கணக்கு கற்றுக்கொள்ளுவதில் உள்ள சிக்கல்கள் .டிஸ்க்ராபியா-எழுத்துக்கள் ,எழுதுவது சம்பந்தமாக வரும் குழப்பங்கள்.
கற்றல் என்பது நமது இந்த்ரியங்கள் ,புற சூழல் ,மூளை மற்றும் நெரம்பு ஆகியவயின் ஒட்டு மொத்த கூட்டு பணியில் ஏற்படுவதாகும் .புலன்கள் வழியாக நாம் ஒரு அனுபவத்தை உள்வாங்கி ,அதை மூலையில் சேமித்து ,அதன் அம்சங்களை தேவையான பொழுது நினைவு கூறுவது அவசியம் .வாசித்தல் என்பது வேறு கற்றல் என்பது வேறு ,கற்றலில் கவனம் மிக முக்கியம்.
நான் எனது அனுபவத்தில் அதிகம் காணும் கற்றல் குறைப்பாடு - கவனக்குறை செயல் தீவிர (attention deficit hyper active-adhd disorder )நோய்களே ஆகும் .இக்குழந்தைகள் துருதுருவென்று ஓடி கொண்டே இருப்பார்கள் ,எந்த ஒரு விஷயத்திலும் தொடர்ந்து அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது .சற்று வயதிற்கு மிகுந்த அதிக பிரசங்கித்தனமான பேச்சுக்களும் கூட சிலருக்கு இருக்கும் .அடம் ,கோபம் போன்ற உணர்ச்சிகள் மிகையாக இருக்கும் .இவர்களை நீங்கள் ஏதாவது ஒரு வேலையில் ஈடுப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் .இக்காலத்தில் அனேக குழந்தைகள் இப்படி தான் இருப்பார்கள் அவர்களுக்கு எல்லாம் இந்த பிரச்சனை என்று பொருள் இல்லை .ஐந்து ஆறு வயது வரை நாம் பொருத்து இருக்கலாம் அதன் பின்னும் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்தால் ,அதோடு எழுத்துக்கள் ,வார்த்தைகள் உள்வாங்குவதில் பிரச்சனை இருந்தால் நிச்சயம் கவனிக்க வேண்டும் .முறையாக மன நல அல்லது குழந்தைகள் நல மருத்துவரை சந்திப்பது சிறந்தது .
இது வரை எந்த மருத்துவ முறையிலும் இவ்வகை நோய்க்கு தீர்கமான தீர்வு கண்டு பிடிக்கவில்லை என்பதே உண்மை .ஆகினும் கூட சில காலம் கழித்து தொடர் முயற்சியால் இவ்வகை குழந்தைகள் சாதிக்கிறார்கள் .இதற்க்கு பெற்றோர்களின் பங்கு அபாரமானது ,மிகுந்த பொறுமை மற்றும் பக்குவம் வேண்டும் அதே போல் ஆசிரியர்களின் பங்கும் மிகவும் முக்கியமானது ,இவர்களுக்கு கற்றுக்கொடுக்க சில புதிய முறைகளை பயன்ப்படுத்த வேண்டும் ,சற்று கூடுதல் கவனம் மற்றும் நேரம் ஒதுக்க வேண்டும்
தற்போதைக்கு இந்தியாவில் ஆட்டிசம் சார்ந்த நோய்களை கவனிக்க சிறப்பு மையங்கள் உள்ளன .இங்கு மனோ தத்துவம் ,மூளைநெரம்பியல், ஆயுர்வேதம் ,யோகம் (குறிப்பாக சில ஆசனங்களும் ப்ரானயமங்களும் ) ஆகியவைகளை இணைத்து ஒரு கூட்டு முயற்ச்சியாக வெற்றிகரமாக செயல் படுத்துகின்றனர்.ஆயுர்வேதத்தில் -உட்கொள்ள சில மருந்துகள் ,சிரோ தாரா சிகிச்சைகள் வழங்க படுகின்றன .
இந்நோயை பொறுத்த மட்டில் நோயை பற்றிய அறிவும் புரிதலுமே இதற்க்கு மிக முக்கிய சிகிச்சை .குழந்தைகளை கணினி தொலைக்காட்சி போன்ற கவன ஈர்ப்பான்களை தவிர்த்து ,அம்மா அப்பா தாத்தா பாட்டி ஆகியர்வகளின் அன்பின் சூழலே நோய் தடுப்பு முறை ஆகும் .இயற்கையான சூழலில் குழந்தைகளை வெளி உலகில் பழக விடுதல் மிக முக்கியம் ஆகும் .
விதைகள் நடுவது சுலபம் ,அதை வளர்த்து மரமாக்கி பூத்து குலுங்க செய்வது மிக கடினம் .
மானுடம் மலரட்டும் .
இது சம்பந்தமாக பயனுள்ள சில சுட்டிகள்
பட உதவி -கூகிள்

5 comments:

 1. தகவல்களுக்கு நன்றி

  எனது நண்பரின் மகன் டிஸ்கிராபியாவால் பாதிக்கப்பட்டு உள்ளான். அதற்கு ஆயர்வேத முறைப்படி என்ன தீர்வு காணலாம் ?

  தங்களின் ஆலோசனை தேவை

  நன்றி

  விஜய்

  ReplyDelete
 2. அன்புள்ள விஜய்
  இதற்க்கு நேரடியாக ஆயுர்வேதத்தில் என் அறிவுக்கு எட்டிய வரை தீர்வு இல்லை .ஆயினும் ,பொதுவாக நாம் நம் வாழ்வில் மூளையின் பத்து சதவிகித திறனை மட்டுமே பயன்படுத்துகிறோம் .அந்த dormant பகுதிகளை தூண்டுவது மூலம் ,மூளையின் பிற பகுதிகள் இந்த வேலையில் பங்கெடுக்கும் .இதற்க்கு தொடர் பயிர்ச்சி ஒரு முக்கிய வழி .பயிற்ச்சிகள் மூலம் ,நெரம்புகள் மூளைக்கு சமிங்கை அனுப்புகிறது ,அதை ஒட்டி மூளை அத்திறனை வளர்த்துக்கொள்ளும் .ஆயுர்வேதம் -மூளை திறனை மேம்படுத்த , மூளையின் receptiblity and recollective ability of learned skills ,ஆகியைகளை மேம்படுத்த பயன் படும் . இத்தோடு சேர்த்து ஆசனங்களும் ப்ரானயாமங்களும் ஓரளவு பயனுள்ளதாக படுகிறது .

  ReplyDelete
 3. பிற்குறிப்பு -
  குழந்தைகளின் கவன குறை செயல் தீவரத்தை (attention deficit hyper active disorder)போக்க -சிறு பயனுள்ள பயிற்சிகள்
  சிறிய வாயுள்ள குளிர்பான பாட்டில்களில் -டம்ளர் மூலம் ,வெளியே நீர் சிந்தாமல் நீர் நிரப்ப சொல்லுவது
  ஊசி நூல் கோர்ப்பது ,ஒரிகமி பயன்புத்தி பேப்பரில் வெவ்வேறு வடிவங்களை கத்தரிப்பது,ஒரு பாட்டை போட்டு அதை திருப்பி பாட சொல்வது போன்றவை குழந்தைகளின் கவனத்தை அதிகரிக்க பயனுள்ள எளிய முறைகள்

  ReplyDelete
 4. பயனுள்ள நல்ல தகவல், நன்றி

  ReplyDelete
 5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜி மேடம்:)

  ReplyDelete